நட்பின் அச்சு
நட்பின் அடையாளம்
என்றுமே சொல்லாமல் புரிவது
காதலில் மட்டும் கண்கள் பேசாது
நட்பிலும் கண்கள் பேசும்
நீ நான் நாம்
என காதல் சொல்லும்
நீ தான் நான் ,நான் தான் நீ
என நட்பு சொல்லும்
இங்கு, நாம் என்ற சொல்லுக்கு இடமில்லை
மனதின் காயத்திற்கு துணையாகுமே காதல்
நட்போ அதற்கு மருந்தாகுமே
காதல் தவறென உணர்ந்தால் பிரியும்
நட்போ தவறென உணர்ந்தால் திருத்திக்கொள்ளும்
மௌன பாஷை காதலுக்கு மட்டுமல்ல
நட்பிட்கும் உகந்தது மௌனம்
அழகை வர்ணிப்பதில் வல்லவன் காதல்
அதனை எடுத்துக்காட்டுவதில் வல்லவன் நட்பு
ஒரு நாள் காதலை காணவில்லை என்றால்
மனம் துடித்துப்போகும்
நட்பினை காணவில்லை என்றால்
மனம் சிதறிப்போகுமே
காதல் நம்பிக்கையில் தொடருவது
நட்போ புரிதலில் தொடருவது
காதலின் அடித்தளம் உணர்வு
நட்பின் அடித்தளம் அன்பு
நட்பிற்கு எல்லையே இல்லை
மரணத்தை தொட்டாலும் எடுத்துக்காட்டாய்
எப்போதுமே உலகில் பேசப்படும் !!!
No comments:
Post a Comment