Wednesday, 5 September 2018




சிற்பி

மேகக்கூட்டங்கள் சூழ்ந்து , கார்மேகமாக மாறி
மழை பொழிந்து, மக்களை மகிழ்விப்பதுபோல
எங்கள் ஆசிரியர்கள் அவர்களது
திறனை பொழிந்து,
மாணாக்கர்களாகிய எங்களுக்கு
வெற்றிப்பாதையை வழிகாட்டி,
நாங்கள் செய்யும்
நற்செயலை பாராட்டி,
தீயசெயலை கண்டித்து,
எங்கள் திறனை வெளிக்கொணர்ந்து,
இந்த உலகமே -
எங்களை தலைசிறந்த மனிதனாய் பார்க்க
வழிகாட்டிய ஆசான்களுக்கு நன்றிகள்
வானத்திலுள்ள நட்சத்திரமாய் -
என்றுமே எம் நினைப்பிலிருக்கும்,
ஆசான்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!



Sunday, 10 December 2017





                                           தேனும் பட்டாம்பூச்சியும்

அவன் இல்லையேல் இவன் சோர்ந்துவிடுவான்
நீரின் ஓட்டத்தில் மயங்கியவன் ,
செடிகளோடு விளையாடியவன் ,
பூக்களின் தோழன் ,
மழையை ரசித்தவன்,
ஜீவன்களுக்கு அன்பானவன்,
பார்பாரின் மனதை கவர்ந்தவன்,
எண்ணம் போல் சுற்றுபவன் ,
எதற்கும் அஞ்சாதவன் ,
எதையும் எதிர்பாக்காதவன் ,
இருப்பினும் தேன் இல்லையேல்
அவன் இதயம் துடிக்காது,
ஒரு துளி தேன் போதுமே
அவன் இதயம் துடிப்பதற்கு ......


வாழ்ந்தா பட்டாம்பூச்சி போல வாழனும்
நம்ம இதயம் துடிக்கவும் ஒரு துளி நம்பிக்கையான நினைவே போதுமே

Thursday, 7 December 2017





                               பயம்

கத்தியின் முனை நான்
          என்னைக் கண்டு அஞ்சாதே
அஞ்சி அபூர்வ வாழ்வை
          பயணிக்காமல் அடங்காதே
எப்போது துன்பம் முனையை தொடுமோ
          அன்று முனையே அஞ்சாத வாழ்வாகும்  .....




சுகமான பிரிவு


நான் பறவையாய் கூட்டிலிருந்து பறந்தேன,
படிப்பு என்னும் தாகத்திற்காக செல்கிறேன்,
பத்து நாட்கள் இருந்தபொது-
              உன் பிரிவு வரும் என எனது மனம் ஏற்றது
ஆனால் இரண்டு நாட்கள்  இருக்கும்போதுதோ
              ஒவ்வொரு நொடியும் அந்த நினைப்பிலே துடிக்கிறது.
  
                                                                                             ----ஒரு மகளின் ஏக்கம்

Sunday, 26 November 2017




ஒரு உணர்வான பேச்சு


உன் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் என் இதயத்தை உணர்ந்தேன்
உன் கண்கள் சிமிட்டும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் உண்மை உணர்ந்தேன்
உன் மழலை பேச்சு ஒழிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் இன்னிசையை உணர்ந்தேன்
உன் சிரிப்பினை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் முத்துக்களை உணர்ந்தேன்
உன் திறமையை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் பெருமையாய் உணர்ந்தேன்
உன் அழகான அன்பினை நீ வெளிப்படுத்திய ஒவ்வொரு நொடியிலும்
     நான் உன்னை உணர்ந்தேன்
உன்னை உணர்ந்தபோது எல்லாம்
     நான் என்னையே உணர்ந்தேன்
என்னிலிருந்து தான் நீ என்பதை
     நான் முழுமையாய் உணர்ந்தேன்
உன்னை என் தோளிலே சுமக்க
     என்றுமே ஆசை தான்
உன்னை காணும் ஒவ்வொரு விடுமுறையிலும்
     எனது கண்கள் இன்பத்தில் துள்ளிக்குதிக்கிறதே
உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியிலும்
     மறுமுறை உனைக்கான கண்கள் காத்திருக்கிறதே !!!
                                                                ----  ஒரு தாயின் வார்த்தைகள்

Sunday, 19 November 2017



கல்லூரி அன்னை



அலைகள், எங்கோயிருக்கும் சிற்பிகளையெல்லாம்
         கரையில் சேர்ப்பது போல
நீ எங்களை மலர்செண்டிலுள்ள
         மலர்களாய் சேர்த்துவிட்டாய்
சேர்ந்த மலர்களைக் கண்டு
         கண் குளிர்வது போல
நீ எங்களை,  
           சிற்பமாய் செதுக்கிவிட்டாயே

சிற்பங்கள் சிற்பியின் , அன்பின் அடையாளம்
         அத்தகைய மனமார்ந்த அன்பை
நீ எங்களுக்கு,
         அள்ளி தந்துவிட்டாயே

Sunday, 12 November 2017




பறவையின் வேலை தந்திரங்கள்


படிப்பிலுயர நிறுவனத்தில் இணைந்து

விடியல் மணி ஒழிக்க -
          பம்பரமாய் சுழன்று,
        ஆமையான பேருந்தில் பயணித்து,
        பருந்தாக சிறகடித்து,
வெயிலில் பறந்து -
       அறிவு தந்திரங்களை அதிகரிக்க,
       நட்பினை காணாமல் விலகிநின்று,
       பல நிலைகள் புரியாதவாறு,
       மனம் சோகத்திலே தவிக்க,
இரவில் என்றோ ஓர் நாள்-
       காலம் விடியுமென நம்பி,
       விழிகள் மூடி உறங்க,
       நெஞ்சம் மட்டும் - 
          நினைப்பிலேயே துடித்துக்கொண்டிருக்க,
அந்த கணம் நட்பின் சிரிப்புகளே
       நம்மைதாங்கும்  உயிராக துடிக்கும்

ஆறு மாதக்காலத்திக்கு பின்
     அழகிய பறவைகளின் இதயங்களை எல்லாம்
        வேடந்தாங்களின் கதவுகள் திறக்கும் -
           நிமிடத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது .........

*******************************************************************************
  இன்பத்தின் விடியலே வாழ்வின்-
                            அழகான நினைவுகளை செதுக்கிவிடும்.
*******************************************************************************