Friday, 18 December 2015


                   
           
                   கல்லூரியில் சாரல் 
 
என்ன  மாயமோ  மந்திரமோ
    மனசுல  புது உற்ச்சாகம்
நமக்கு  பிடிச்ச வெண்ணிலவ
    பிடிச்சது போல
நமக்கு தெரியாத  காற்றை
     உணர்ந்தது போல
அடயெது என்ன
       மனம் நெகிழும்  பரீட்சை
பதில் எழுத  மறந்திரும்
       வரிகள்  கலைத்துவிடும்
       வார்த்தைகள் திக்கிவிடும்
இரவை  சூரியன்  
                    மறைத்துவிட்டான்
தாஜ் மகாலை கண்ணிலே
                         கட்டிவிடுவோம்
நட்பின்  கோட்டையை
                        செதுக்கிவிட்டோம்
கனவை  வானிலே
                            பரக்கவிட்டோம்
நினைத்ததை  முடிப்போம்
எண்ணங்களை பதித்துவிட்டோம்
எப்போதாவது  எல்லாம்
        பறந்து விடுமா?
என்பதற்கு பதில்
          என்றுமே
         கல்லூரியின்  நிமிட  துடிப்புகள் .....

       


     

     


     

Tuesday, 8 December 2015


             
            கலைந்த  சென்னை 

  ஒரு  நாளும் காணாத  உலகம் 
       தண்ணீரிலே  மிதந்தது 
ஒரு  நாளும்  மாறாத உலகம் 
         தீவாகவே  காணபட்டது 
ஒரு  நாளும்  நினைக்காத  உலகம் 
         இருளிலே  சூழ்ந்தது 
ஒரு  நாளும்  தவிக்காத  உலகம் 
           குடிநீரே  இல்லாமல்  தவித்தது 
ஒவ்வொரு  நாளும்  இயங்கிய  உலகம் 
          தரையையே  காண  தவறியது 
ஒவ்வொரு  கண்ணிலும்  கண்ட  உலகம் 
           கண்ணீரிலே  கலைந்தது 
ஒரு  நிமிடத்திலே  இடிந்தது  உலகம் 
          மனதை  கலைத்து 
             வரலாறை  தொட்டு 
      சிதைத்துவிட்டது  நம்  மக்களை ....

                  
                விழுந்தும்  எழுவோம்  என  தன்னம்பிக்கை 
                     எல்லோரிடமும்  குடி  ஏறியது !!!
          

        

                    


              எனக்குள்  என்  அம்மா 

கண்ணை  திறந்தால்  நீ  இல்லை 
      கண்ணை  மூடினால்  நீ  இருக்கிறாய் 
உன்னை  நினைத்தால் இதையதுடிபும்
       அதிவேகமாக  துடிக்கிறது 
ஒரு  நிமிடமும்  உன்னை  பிரிய 
       மனம்  நினைத்ததில்லை 
கொலுசொலி  கேட்டால்  நீ  தானோ 
        என  கண்கள்  தேடிபார்கிறது 
என்  இமையும்  இமைக்காமல்   உன்னை 
         அங்கும்  மிங்கும் தேடுகிறது
கண்  இமைக்கும்  நேரத்தில் 
மின்னல்  வெட்டும்  நேரத்தில் 
         உன்  கொலுசொலி  கேக்காமல் போகுது 
அப்போதான்   தெரியுது  
       நான்  தான்  நீ ...
        நீதான்  நான் ... என 
நீ  என்னக்கு  உயிர்  தந்தாய்
        நான்  உன்னை  எனக்குள்  கண்டேன் 
அம்மா  நீ  என்றால்  
         என்னை  தாங்கிய  உயிர் 
நான்  என்றால் 
         உன்னை  தாங்கும்  உயிர்தானோ என  
         என்னை  சிலிர்கவைத்தது  என்  மனம் ....