தேனும்
பட்டாம்பூச்சியும்
அவன்
இல்லையேல் இவன் சோர்ந்துவிடுவான்
நீரின்
ஓட்டத்தில் மயங்கியவன் ,
செடிகளோடு
விளையாடியவன் ,
பூக்களின்
தோழன் ,
மழையை
ரசித்தவன்,
ஜீவன்களுக்கு
அன்பானவன்,
பார்பாரின்
மனதை கவர்ந்தவன்,
எண்ணம்
போல் சுற்றுபவன் ,
எதற்கும்
அஞ்சாதவன் ,
எதையும்
எதிர்பாக்காதவன் ,
இருப்பினும்
தேன் இல்லையேல்
அவன்
இதயம் துடிக்காது,
ஒரு
துளி தேன் போதுமே
அவன்
இதயம் துடிப்பதற்கு ......
வாழ்ந்தா
பட்டாம்பூச்சி போல வாழனும்
நம்ம
இதயம் துடிக்கவும் ஒரு துளி
நம்பிக்கையான நினைவே போதுமே